(வி.ரி.சகாதேவராஜா)
பாரிய மாமரம் ஒன்றை அடியோடு முறித்து வீழ்த்தியது காட்டு யானை.
இச் சம்பவம் சம்மாந்துறையை அடுத்துள்ள கந்தன்வெளி வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவைச் சேர்ந்த இராஜநாயகம் ரமேஷ் என்பவரின் கந்தன்வெளி வயலில் இருந்த பாரிய மாமரமே இவ்விதம் முறித்து வீழ்த்தப்பட்டது.
அத்தோடு அவரது விதைக்கப்பட்ட வயலும் யானை திரிந்ததால் சேதத்துக்குள்ளானது.
இவ்வாறு காட்டு யானையின் அட்டகாசம் தினமும் அந்த பகுதியிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் அச்சத்துடன் விதைப்பில் ஈடுபட வேண்டி இருக்கின்றது.
Post a Comment