வி.சுகிர்தகுமார் 0777113659
ஜக்கிய கல்வி ஊழியர் சங்க அம்பாரை மாவட்டத்திற்கான நிருவாக சபை தெரிவுக்கூட்டம் மாவட்ட இணைப்புச் செயலாளரும் பொத்துவில் தொகுதி இணைப்பாளருமான வி.வினோகாந் தலைமையில் நேற்று (04) மாலை அக்கரைப்பற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில ஜக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோகினி குமாரி கவிரெட்ண ; பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சங்கத்தின் பிரதம செயலாளர் பிரியந்த பத்தேரிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பண்டார உள்ளிட்ட அம்பாரை மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோகினி குமாரி கவிரெட்ண தற்கால கல்வி முறையினால் அதிகளவாக பெண் பிள்ளைகளே உயர் கல்வியை தொடரும் நிலை காணப்படுவதாகவும் ஆண் பிள்ளைகளின் இடைவிலகல் மற்றும் கல்வியில் மந்தகதியான வளர்ச்சி காணப்படுவதாகவும் கூறினார். ஆகவே எதிர்காலத்தில் இவற்றை நிவர்த்திக்கும் வகையில் கல்வி கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றார்.
அத்தோடு அதிபர் ஆசிரியர்களின் நலன்கள் இடமாற்றங்கள் தொடர்பாகவும் கல்வி மற்றும் கல்விசார ஊழியர்களின் தேவைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எனும் வகையில் தான் குரல் கொடுத்து வருவதாகவும் அதிதோடு ஜக்கிய கல்வி ஊழியர் சங்கம் அதிக கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் பிரதான செயலாளர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்த நிலையில் நிறைவினில் ஜக்கிய கல்வி ஊழியர் சங்கத்திற்கான தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 21 பேர் கொண்ட நிருவாக சபை அக்கரைப்பற்று கல்முனை சம்மாந்துறை திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
முதன் முறையாக அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பெருமளவான அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி சார ஊழியாகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment