அஸ்வசும' நலன்புரி மேல் முறையீட்டு விசாரணைகள்-




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 அஸ்வசும' நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பொதுமக்களின் மேல் முறையீட்டு விசாரணைகள் பிரதேச செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
நலன்புரி நன்மை கொடுப்பனவை பெறுதல் தொடர்பான மேன்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான விசாரணைகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5942 விண்ணப்பங்கள் அசுவெசும திட்டத்தி;ல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படாத 2434 பேர் மேன்முறையீடு செய்திருந்தனர். அத்தோடு 365 பேருக்கு எதிராக ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இடம்பெற்றுவரும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையிலான இவ்விசாரணைக் குழுவில் திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந் மற்றும் தலைமைய சமுர்த்தி முகாமையாளர் அரசரெத்தினம் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் மேன் முறையீடு செய்தவர்களுக்கான  விசாரணை நேரம், திகதி என்பன பிரிவு கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக அறிவிக்கப்பட்டு விசாரணைகள் தொடராக இடம்பெற்று வருகின்றது.
பொதுமக்கள் உரிய ஆவணங்களை தயார்படுத்திக் கொள்வதுடன் தங்களுக்கு வழங்கப்படுகின்ற திகதி, நேரங்களில் தவறாது சமூகமளித்து  மேலதிக அலைச்சல்களை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.