#PulmottaiFirthowze
இலங்கையின் கல்வி தொடர்பானது...
01) இலங்கையில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை?
⭐11095 (2021)
02) இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளின் எண்ணிக்கை?
⭐10152 (2021)
03) கொவிட் 19 காலத்தில் பாடசாலை மாணவர்கள் கல்வியை தொடர நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர்?
⭐குருகுலம்
04) கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு?
⭐1998
05) கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது ஆண்டு?
⭐1997( 1003/05)
06) இலங்கையில் உள்ள கல்வி மாட்டங்கள் எத்தனை ?
⭐25
07) கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்?
⭐உலகவங்கி
08) இரண்டாம் நிலைக் கல்விக்கான துறைசார் மேம்படுத்த செயற்றிட்டம் (SESIP)
⭐ உதவி வழங்கும் நிறுவனம் - ADB
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 400 மில்லியன் US $ (கடன் உதவி)
⭐செயற்றிட்ட கால எல்லை - 2020-2026
09) பொது கல்வி நவீனமயப்படுத்தல்
செயற்றிட்டம் (GEMP)
⭐உதவி வழங்கும் நிறுவனம் - உலகவங்கி
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 100 மில்லியன் US $
⭐செயற்திட்ட காலஎல்லை - 2019 - 2023
10) தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தி செயற்றிட்டம்
⭐உதவி வழங்கும் நிறுவனம் - சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியம் (OFID)
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 60.7 மில்லியன் US $
⭐செயற்றிட்ட காலஎல்லை - 2018 -2022
11) தொழில்நுட்ப பாடத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியை நிர்மானித்தல்
⭐உதவி வழங்கும் நிறுவனம் - கொரிய அரசின் சர்வதேச கொரிய ஒத்துழைப்பு முகவர் (KOICA)
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 14.95 மில்லியன் US $
⭐செயற்றிட்ட காலஎல்லை - 2015 - 2025
12) கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் செயற்றிட்டம்
⭐உதவி வழங்கும் நிறுவனம் - கொய்கா (KOICA)
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 7.5 மில்லியன் US $
⭐செயற்றிட்ட கால எல்லை -2018-2022
13) இரண்டாம் நிலைக் கல்விக்கான துறைசார் தகவல் தொழில்நுட்ப நிலையங்களைத் (ICT Hubs) தாபித்தல்
⭐உதவி வழங்கும் நிறுவனம் - Korean Exim Bank
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 5706 மில்லியன் ரூபா
⭐ செயற்றிட்ட காலஎல்லை -2019-2021
14) விசேட தேவைகளையுடைய மாணவர்களது கல்வியை வலுப்படுத்தல்
⭐உதவி வழங்கும் நிறுவனம் - சர்வதேச ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் அமைப்பு((JICA)
⭐மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 435 மில்லியன்
⭐ செயற்றிட்ட காலஎல்லை - 2019 - 2022
15) பெருந்தோட்டப் புறப் பாடசாலைகளை கட்டியெழுப்புதல்
⭐உதவி வழங்கும் நிறுவனம் -இந்திய அரசாங்கம்
⭐ மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பீடு - 345 மில்லியன் ரூபா
⭐செயற்றிட்ட காலஎல்லை -2020 -2023
16)இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை?
⭐19
17) முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி?
⭐மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி
18) இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
⭐C.W.W கண்ணங்கர
19) C.W.W கண்ணங்கர அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி?
⭐1931 - 1947
20) சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
⭐E.A நுகேவெல
21) இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவர்?
⭐C.W.W கண்ணங்கர
22) இலவச சீருடை வழங்கப்படுவது?
⭐1993 முதல்
23) இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு?
⭐2015
24) இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது?
⭐1980 முதல்
25) தற்போதைய கட்டாய கல்வி வயதெல்லை?
⭐5-16 வயது (20/4/2016)
26)ஐ.நா சபையால் 'பிள்ளை' என. ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை? ⭐பிறப்பு முதல் 18 வயது வரை
27)இலங்கையில் இலவசக்கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
⭐1945
28)இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு?
⭐1987
29) இலங்கையில் தற்போது உள்ள தேசியபாடசாலைகளின் எண்ணிக்கை?
⭐383
30) தற்போது இலங்கையிலுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை?
⭐100 (2021)
31) தற்போது இலங்கையிலுள்ள கோட்டக் கல்விu அலுவலகங்கள் எண்ணிக்கை?
⭐312
32)தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
⭐8
33) தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு?
⭐தேசிய கல்வி ஆணைக்குழு (NEC)
34) பாடசாலை கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு?
⭐ தேசிய கல்வி நிறுவகம் (NIE)
35) தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
⭐ இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
36) தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது?
⭐ 8 வருடங்களுக்கு ஒரு தடைவை
37) தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
⭐1991
38) தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
⭐1986
39) இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள்?
⭐ கொழும்பு, திறந்த பல்கலைக்கழகம்
40) பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
⭐போர்த்துக்கேயரால்
41) ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி?
⭐பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி
42) C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயர்?
⭐ ஹெந்தஸ (1932)
43) முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு?
⭐ உள்ளூராட்சி மன்றங்கள்
44) பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
⭐1869
45) பாடசாலை மைய ஆசிரியர் நியமனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
⭐ 2011
46) சார்க் பல்கலைக்கழகம் உருவாக்ப்பட்ட ஆண்டு?
⭐2007 (புது டெல்லி)
47 பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு?
⭐1960
48) திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு?
⭐1980
49) இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
⭐1874
50) சுயமொழிப்போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
⭐1956
51) தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்? ⭐குளியாப்பிட்டிய
52)இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்? ⭐மல்வானை
53) இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம்?
⭐ மத்துகம
54) வணிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அமைந்தள்ள இடம்?
⭐ மகரகம
55) முதலாவது திறன்வகுப்பறை (Smart Classroom) அமைக்கப்பட்டது?
⭐ ஜயவர்த்தனபுர (ஆண்கள்) மகாவித்தியாலயம்.
56) இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம்? ⭐ஹோமாகம
57) தெற்காசியாவின் முதலாவது பசுமைப்பல்கலைக்கழகம் எது?அமைந்துள்ள இடம்?
⭐ (National School of Business Management - NSBM)
⭐ ஹோமாகம, பிட்டிபன
58) கல்வி அமைச்சினது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள இடம்?
⭐பத்தரமுல்ல (இசுறுபாய)
59) 'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்?
⭐ லலித் அத்துலக் முதலி
60) குடியரசு, சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்? ⭐ பிளேட்டோ
61) 'கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன' என்று கூறியவர்?
⭐W.றோஸ்
62) அரசியல் என்ற நூலை எழுதியவர்?
⭐ அரிஸ்ரோட்டில்
63) 'துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்களே' எனக் கூறியவர்? ⭐ மார்டின் லூதர் கிங்
64) 'கல்வியே சக்திவாய்ந்த ஆயுதமாகும்' எனக் கூறியவர்?
⭐ நெல்சன் மண்டேலா
65) 'அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென' வலியுறுத்தியவர்?
⭐ ஜோன் டூயி
66) கல்வியில் பயன்பாட்டுவாதக் கருத்துக்களை முன்வைத்தவர்?
⭐ ஜோன் டூயி
67) 'எமிலி' எனும் கல்வி தொடர்பான நூலை எழுதியவர்?
⭐ ஜீன் ஜாக்ஸ் ரூசோ
68) உளப்பகுப்புக் கொள்கையை முன்வைத்தவர்?
⭐ சிக்மன் பிரய்ட்
69) இயற்கைவாத or சூழல்மையவாத சிந்தனையை முன்வைத்தவர்?
⭐ ரூசோ
70) கல்வி தொடர்பாக இலட்சியவாத கருத்தை முன்வைத்தவர்?
⭐ பிளேட்டோ
71) 5E முறையை அறிமுகம் செய்தவர் ?
⭐ ரொகர் பைபீ (Rodger Bybee)
72) பாடசாலை முகாமைத்துவக் குழுவில் உள்ளடங்க வேண்டிய உயர்ந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?
⭐ 12 (1 வருட பதவிக் காலம்)
73) இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
⭐ 2007
74) ஆசிரியர் தொழில்வாண்மை என்பதனாற் கருதப்படுவது? ⭐ஆசிரியர்களால் பெறப்படவேண்டிய ஒரு தன்மை.
75) பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு?
⭐ 1998
76) 1980ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தக் கொள்கை?
⭐ கல்விச் சீர்திருத்த வெள்ளை அறிக்கை
77) பாடசாலைக் கல்வி அமைச்சு ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்டு?
⭐ 2000
78) கல்வி முறையில் தேர்வுகளை அறிமுகம் செய்த நாடு?
⭐ சீனா
79) இலவசக் கல்வியை அறிமுகம் செய்த நாடு?
⭐ நெதர்லாந்து
80) உலகின் முதலாவது பல்கலைக்கலகம்?
⭐University of Bologna - Italy (1088)
81) தேசிய தொழில் தகமை (NVQ) முறைமையை அறிமுகப்படுத்திய நாடு?
⭐ இங்கிலாந்து
82) தேசிய தொழில் தகமை (NVQ) சட்டத்தின் கீழுள்ள மட்டங்களின் எண்ணிக்கை?
⭐ 7
83) இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது?
⭐ குரு பிரதீபா பிரபா
84) இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது?
⭐ வித்யா ஜோதி
85) கணிததிற்கான நோபல் எனப்படும் Fields Medal விருதை வழங்கும் அமைப்பு?
⭐ சர்வதேச கணித ஒன்றியம்
86) மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?
⭐ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
87) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை?
⭐ காலி றிச்மன்ட் கல்லூரி (1814)
88) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிறைச்சாலை பாடசாலை? ⭐ஹேமாகம சுனிதா வித்தியாலயம், (வட்டரக்க சிறைச்சாலை - 2014)
89) இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் தொழிநுட்பக் கல்லூரி?
⭐ மருதானை தொழிநுட்பக் கல்லூரி
90) இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்?
⭐ சிலோன் பல்கலைக்கழகம் (1921)
91) தேசியளவில் பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
⭐ இலங்கை பரீட்சைத் திணைக்களம்
92) இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்?
⭐தேசிய கல்வித் வெளியீட்டுத் திணைக்களம்
93) பரீட்சை முறைகளை அறிமுகப்படுத்தியவர்?
⭐ ஹென்றி பிஸல் (Henry Fischel )
94) ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளின் எண்ணிக்கை?
⭐ 6
95) கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்?
⭐ நெனசல
96) பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்?
⭐ யுனஸ்கோ
97) UNESCO என்பதன் விரிவாக்கம்?
⭐ United Nations Educational, Scientific and Cultural Organization (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)
98) ஆசிரியர் என்பதன் பொருள்?
⭐ தவறை திருத்துபவர் (ஆசு = தவறு, இரியர் = திருத்துபவர்)
99) மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது?
⭐ 13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்
100) நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்?
⭐ திடசங்கல்பம்
101) மொத்த புள்ளிகளுக்கு பதிலாக Z புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
⭐ 2001
102) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்? ⭐ உதவிப்பணம் வழங்கல்
⭐ பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
103) பிள்ளை ஒன்றை பாடசாலையில் சேர்ப்பதற்கான மிகக் குறைந்நத வயதெல்லை?
⭐ 4வருடம், 6மாதம்
104) கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை?
⭐ இசுறு
105) 'அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம்?
⭐ 2016-2020
106) க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
⭐ 2013
107) கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்?
⭐ அறிவு, திறன், மனப்பாங்கு
108) முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்?
⭐ போர்த்துக்கேயர்
109) பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்?
⭐ வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்
110) இலங்கை மக்களின் நலன் கருதி நாட்டின் பல இடங்களிலும் உதவி நன்கொடை பாடசாலைகளை அமைத்த அறிஞர்?
⭐ M.C சித்திலெப்பை
111) தேசிய கல்வியியற் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்?
⭐ ரணில் விக்ரமசிங்க
112)முன்பள்ளி பாடசாலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்?
⭐மரியா மொண்டிஸரி (இத்தாலி)
113)ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனங்கள்?
⭐ அமெரிக்கன் மிசனரி, வெஸ்ஸியன் மிசனரி, லண்டன் மிசனரி
114) ஓல்லாந்தர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனம்?
⭐ ஸ்கோலார்கள் கொமிஸன்
115) ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
⭐ டோக்கியோ, ஜப்பான் (1973)
116) சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர்?
⭐ றொபட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல் (1907)
117) இலங்கைப் பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
⭐ 1912
118) இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிறுவர் நட்புறவு பாடசாலை?
⭐ ஹோமாகம பாடசாலை 2002
119) கல்விக்கான உரிமையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச சமவாயம்?
⭐ 1948 மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனம்
120) தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம்?
⭐ 1939, 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்
121) பிள்ளைகளின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதைக் காட்டும் சுட்டென்?
⭐ Body Mass Index (BMI)
122) SBA என்பதன் விரிவாக்கம்?
⭐ School Based Assessment (பாடசாலை மட்டக் கணிப்பீடு)
123) SBA முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, அதற்கு உதவி வழங்கிய நிறுவனம்?
⭐ 1999, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)
124) SBTD இன் விரிவாக்கம்?
⭐ School Based Teacher Development (பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி)
125) நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்?
⭐ International Standard Book Number
126) ESDP என்பது?
⭐ Educational Sector Development Programme
127) PSI என்பது?
⭐ Programme School Improvement (பாடசாலை மேம்படுத்தல் வேலைத்திட்டம்)
128) பல் நுண்ணறிவு தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்?
⭐ ஹவார்ட் காடினார்
129) சர்வதேச புத்தக தினம்?
⭐ ஏப்ரல் 23
130) "Education" என்னும் சொல் எந்த மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது?
⭐"Educare" எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து
131) "ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது" என்று கூறியவர் யார்?
⭐ பாரதியார்
132) "இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடு தான் கல்வி" என்று கூறியவர் யார்?
⭐ விவேகானந்தர்
133) "பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி" என்று கூறியவர் யார்?
⭐ அரிஸ்டோட்டில்
134) "பிள்ளைக்குத் தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை வழங்குதல் கல்வியாகும்" என்று கூறியவர்?
⭐ ஜோன் டூயி
135) "கல்வி என்பது வாழக் கற்றல்" என்று கூறியவர் யார்?
⭐எட்கார் பொரே
Post a Comment
Post a Comment