கல்முனை மேல் நீதிமன்றம் அணி வெற்றி பெற்றது.
(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கிடையிலான விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை (03) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இப் போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் கெளரவ ஏ.எம்.எம்.ரியால் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கெளரவ அதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ டி.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.மேலும் சிறப்பு அதிதிகளாக அரச சட்டத்தரணிகளான சக்கி இஸ்மாயில்,எம்.ஏ.எம்.லாபீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆறு அணிகள் கலந்து கொண்ட அணிக்கு 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மேற்படி சுற்றுபோட்யின் இறுதிபோட்டியில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் அணியினை எதிர்த்து கல்முனை மேல் நீதிமன்ற அணி மோதியது முதலில் துடுப்படுத்தாடிய கல்முனை மேல் நீதிமன்ற அணி 08 ஓவர்கள் முடிவில் 63 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்படுத்தாடிய சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்கள் இழந்து 37 ஓட்டங்களை பெற்றனர். இதனடிப்படையில் கல்முனை மேல் நீதிமன்ற அணியினர் 27 ஓட்டங்களினால் வெற்றிபெற்றனர்.
இவ்இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ் ஹக்கீமுல்லாவும் சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.எம் சியாம் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
Post a Comment
Post a Comment