அதிவேக நெடுஞ்சாலையை வாழைச்சேனை வரை விஸ்தரிக்க வேண்டும்





 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



தம்புள்ளை வரையுமான அதிவேக நெடுஞ்சாலையை வாழைச்சேனை வரை விஸ்தரிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் பாராளுன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். 

பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம்(15) இடம்பெற்ற போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் 



இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் வருகின்ற போது நாட்டில் எதிர்பாராதா பொருளாதார ஒரு மலர்ச்சி நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 


 உதாரணமாக நான் பிரதிநித்துவப் படுத்துகின்ற கிழக்கு மாகாணம் இன்று எல்லா வளமும் இருக்கின்ற ஒரு மாகாணமாகும் சுற்றுலா துறையை எடுத்து கொண்டால் சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினரின் அருகம்பை பிரதேசம் தொடக்கம் அதே போல் பாசிக்குடா,நிலாவெளி அதற்கிடையில் பல நகரங்களில் சுற்றுலா துறை என்பது இன்று பெரும் இதை விட பலமடங்கு அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதேசமாக கிழக்கு மாகாணம் உள்ளது . 


ஆனால் அங்கு நிலையான அபிவிருத்தி என்பது இன்று மட்டுப்படுத்தப்படட நிலையில் உள்ளது அதாவது தலை நகரத்துக்கும்,விமான நிலையத்துக்கும்,கிழக்கு மாகாணத்துக்குமிடையிலான போக்குவரத்து என்பது ஒரு பெரும் சாவாலான விடயமாக உள்ளது முன்னைய ஜானாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைதிரிபால சிறிசேனவின் அரசாங்கங்கள் நாட்டில் அதி வேக நெடுஞசாலைகளை பல இடங்களில் விஸ்தரித்து இருந்தார்கள் 


எங்கள் ஜனாதிபதி அவர்களிடமும் இங்கு உள்ள இராஜாங்க நிதியமைச்சர்,இராஜாங்க முதலீட்டு அமைச்சர் ஆகியோரிடம் நாங்கள் விடுக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால் தம்புள்ளை வரையுமான அதிவேக நெடுஞ்சாலையை கிழக்கு மாகாணத்துக்கு குறைந்த பட்சம் வாழைச்சேனை வரை முதற்கட்டமாக விஸ்தரிக்க அதற்கான வரைபடம்,மதிப்பீட்டு தொகையினை தாயாரிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் இதனால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் கைத்தொழில் புரட்சியை ஏற்ப்படுத்த முடியும் என்றார்.