பாலமுனையைப்பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றில் திருமணம் செய்தவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய வங்கியல் மற்றும் நிதியியல் துறை விரிவுரையாளருமான ஏ.எச்.றிபாஸ் ( Rifas Bin Abuhuraira ) அவர்கள் இன்று (25) சனிக்கிழமை மலேசியாவின் "மலாயாப்பல்கலைக்கழகத்தில்"
இவர் கலாநிதி பட்டத்தை தனது 33ஆவது வயதில் நிறைவு செய்யும் ஓர் இள வயதுடையவராவார்.
இவர், தனது தாய் தந்தையை இவருடைய இளவயதில் இழந்திருந்தாலும், இவருடைய சகோதரர்களின் வியர்வையினால் தனது கல்வியை இடைவிடாது கற்று பல்கலைக்கழக விரிவுரையாளராகி மட்டுமல்லாது, இச்சமூகம் போற்றக்கூடிய அளவில் கலாநிதி பட்டத்தை பெற்றிருப்பது என்பது தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு இவர் ஒரு உதாரணமாவார்.
பாலமுனை பிரதேசத்தின் கல்வியலாளராக இருக்கும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் Musthafa Sithy Fathima Anas மற்றும் அதிபர் Musthaffa Ibathullah ஆகியோர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். இவர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சஜிதா றிபாஸ் அவர்களின் கணவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment