விசேட துஆ பிரார்த்தனை !




 


நூருல் ஹுதா உமர்


மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய ஆசிரியராக, அதிபராக 30 வருடங்கள் கடமையாற்றி சுனாமிக்கு பின்னர் புதிய இடத்தில் அப்பாடசாலையை நிறுவி சேவை பலதும் செய்து தன்னுடைய 33 வருட கல்விச் சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நழீர் அவர்கள் வியாழக்கிழமை மாலை காலமானார். அவரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை காலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மாப் பள்ளிவாசல் மையவாடியில் பெருந்திரளானோரின் பங்குபற்றலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர்கள் அமைப்பினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டது டன் காலமான அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நழீர் அவர்களின் மறுமை வாழ்வுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து மாளிகைக்காடு அந்நூர் ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை ஒன்று கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காலமான அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நழீர் அவர்களை பற்றிய நினைவுகளையும் விசேட துஆ பிரார்த்தனையையும் அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எம். மின்ஹாஜ் மௌலவி நிகழ்த்தினார். இந்த துஆ பிராத்தனையில் கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர்கள் அமைப்பினர், அதிபரின் குடும்பத்தினர், அந்நூர் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.