கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் பரிசளிப்பு வைபவமும்




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இவ்வருட மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்விப்பணிப்பாளர் பீ. ஜிகானா ஆலிப் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.சரவணமுத்து அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மருதமுனை உலமா சபை தலைவருமான எப்.எம். அஹமட் அன்சார் மௌலானா நளீமி அவர்களும், சிறப்பு அதிதிகளாக இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.றிபாயுடீன் ஆகியோருடன் முன்னாள் அதிபர்கள், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவர் அமைப்பின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.