புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி





 ( காரைதீவு நிருபர் சகா)


இலங்கை அதிபர்  சேவை தர மூன்றுக்கு தெரிவான புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி இன்று 16 ஆம் தேதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது.

 கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஹாசிம் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இன்று 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெற இருக்கிறது.

 இது வதிவிட பயிற்சி நெறி அல்ல.

காலை எட்டு  மணி முதல் மாலை ஐந்து  மணி வரை இந்த பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட இருக்கின்றது .
இதேவேளை  திருக்கோவில் அக்கரைப்பற்று வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி  அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.