அதிவேக நெடுஞ்சாலையில்




 


அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

அத்தோடு குறித்த சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், சாரதியின் அருகாமையில் இருந்து பயணித்த பெண்ணொருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்