(எம்.என்.எம்.அப்ராஸ்)
திஹாறிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் தரம் 03 மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் சிறுவர் சந்தை இன்று(29)நடைபெற்றது.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி,வியாபார நுனுக்கங்கள்,என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை பெற்றோரும்,பாடசாலை மாணவர்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
குறித்த மாதிரி சந்தை இணைப்பாடவிதான இச் செயற்பாடுகள் மாணவர்களின் தனி ஆளுமை விருத்தியை வெளிக்கொண்டு வரும் வகையில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment