நூருல் ஹுதா உமர்.
கல்முனை கல்வி வலய கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய அதிபர் வீ. எம்.ஸம்ஸம் அவர்களின் வழிகாட்டலில் கமு /சது/சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தரம்-07 இல் கல்வி பயின்று வரும் ஜலீல் பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) எனும் மாணவியால் "காலநிலை மாற்றம்" எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் பேருக்கான விழிப்புணர்வும், பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடலும் திட்டத்தின் கீழ் கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய காலை ஆராதனையின் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றி பலரதும் கவனத்தை ஈர்த்தார்.
கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல். றஜாப்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணியினரும் பங்கேற்று குறித்த மாணவிக்கு மாலை சூடி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment