சூறாவளி "மிதிலி"




 


சூறாவளி "மிதிலி"

Cyclone "Midhili"


இன்று (18) முதல் சில நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. 


இதே போன்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. 


இதே போன்று வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.


கடந்த வாரம் நான் குறிப்பிட்டது போல் இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சியும் தென்சீனக் கடல் வழியாக அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு வந்திருந்த ஒரு காற்று சுழற்சியும் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.


இந்த இரு நிகழ்வும் இணைந்து சில நாட்கள் காணப்பட்டது.


இலங்கை அருகே காணப்பட்ட காற்று சுழற்சியை அந்தமான் பகுதியில் காணப்பட்டு, வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காற்று சுழற்சியானது இலங்கை அருகே காணப்பட்ட காற்று சுழற்சியை தன்பால் இழுத்து ஒரு இணைப்பு சுழற்சியாக செயல்பட்டு வந்தது.


தற்போது அந்தமான் பகுதியில் காணப்பட்ட காற்று சுழற்சியானது ஒரு சூறாவளியாக (மிதிலி - Midhili - pronounced as "Midhili") வலுவடைந்து மணிக்கு 37km/h  வேகத்தில் வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று முதல் பங்களாதேஷ் கரையோரத்தை ஊடறுத்து சென்று கொண்டிருக்கின்றது.


இதன் காரணத்தினால் சூறாவளியினால் ஈர்க்கப்பட்டு இலங்கை அருகே காணப்பட்ட சுழற்சியானது தற்போது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் வட இலங்கை அருகே வந்துள்ளது.


இது குமரி கடல் வழியாக அரபிய கடல் பிராந்தியத்தை நோக்கி வரும் நாட்களில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.