விவாகப் பதிவாளர்,விளக்கமறியலில்




 




புதிய காத்தான்குடி விவாகப் பதிவாளர் ஜாபீர் கைது செய்யப்பட்டார்


 5ம் திகதி வரை  வரை விளக்கமறியல்


காத்தான்குடி புதிய காத்தான்குடியைச் சேர்ந்த திருமண விவாகப் பதிவாளர் யு.எல். முகம்மது ஜாபிர் காத்தான்குடி காதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலீசாரினால் கைது செய்யப்பட்டு இன்று(29)  புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் 5ம்  திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 25ம் திகதி சனிக்கிழமை யன்று காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு தனது மகனின் திருமண பிணக்கு தொடர்பாக சென்ற விவாகப் பதிவாளர் ஜாபீர்   காத்தான்குடி காதி நீதிமன்ற. நடவடிக்கைகளுக்கு இடையூறு  விளைவித்தார் என காத்தான்குடி காதி நீதிமன்ற காதி நீதிபதி சட்டத்தரணி ஏ.முகம்மட்  றூபி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.


இதனையடுத்து இன்று (29) புதன் கிழமை  விவாவகப் பதிவாளர் ஜாபிரை கைது செய்த காத்தான்குடி பொலிசார்  இன்று புதன்கிழமை மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர் படித்திய போது  இந்த வழக்கை விசாரணை செய்த  நீதிபதி எதிர் வரும் 5ம் திகதி வரை பதிவாளர் ஜாபிரை விளக்கமறியலில்  வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலீசா தெரிவித்தனர்.