பொத்துவில் ஆத்திமுனை கிராமத்திற்குள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.
இதே வேளை இன்று அதிகாலை ஆத்திமுனை ஹிஜ்ரத் நகரத்திற்குள் உட்புகுந்த காட்டு யானை பல் வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள அல்-ஸபா பள்ளிவாயலின் வேலியையும் உடைத்துள்ளதாக பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்குள் பல் வேறு பகுதிகளிலிருந்து அகற்றப்படும் திண்மக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இக் குப்பை மேட்டில் குவிந்து காணப்படும் திண்மக்கழிவுகளை உட்கொள்வதற்காக குவியும் யானைகள் அப் பகுதில் உள்ள விவசாய பயிர்களையும் மற்றும் பயன்தரும் மரங்களையும் சேதமாக்குவதுடன் வீதியால் பயணிப்பவர்கள் மற்றும் அதனை அன்மித்த பிரதேசங்களில் வசித்து வரும் மக்களையும் அச்சுறுத்தி வருவகின்றது.
இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பிரதேசத்திற்குள் நுழைந்து குடியிருக்கும் வீடுகளையும் தாக்கி சேதமாக்கி வருவதாக பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன் குறித்த திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரையும் அண்மையில் தாக்கி பலியாக்கியுள்ள சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தனர்.
இவ்வாறு அண்மையில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றையும் முழுமையாக சேதமாக்கியதுடன் பொது மையவாடியின் வேலிகளையும் தாக்கி சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டில் காட்டு யானைகளினால் இப் பகுதியில் அதிகாமன சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த பகுதியில் உள்ள மர்வா பாடசாலையிலும் அன்மைக் காலத்தில் பல சேதங்களை ஏற்படுத்தியதுடன் பாடசாலை வளாகத்திற்குள் சென்று அட்டகாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இது சவாலாகவே அமைவதாக சுட்டிக்காட்டினர்.
எனவே இதனை கருத்திற் கொண்டு இக் கிராமத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் யானை வேலிகளை அமைத்துதரும்படி கிராமவாசிகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
-பொத்துவில் சியாத்-
Post a Comment
Post a Comment