எட்டு வருடங்களின் பின்னர், எட்டப்பட்ட சாதனை




 


(வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 8 வருடங்களின் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில்  மாணவி அய்யூப் கான் இஸ்ஸத் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

பொருளாதார ரீதியாக தேவையுடைய சம்மாந்துறை சென்நெல் கிராம் 02 இல் குறிஞ்சி சாரலில் அமையப் பெற்ற ஹிஜ்ரா பாடசாலையில் பல பௌதீக வள தேவைகளுக்கு மத்தியில் மாணவி இஸ்ஸத் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இம் மாணவியின் சாதனையை பாராட்டும் முகமாக பாடசாலை சமூகம் நேற்று முன்தினம் அதிபர் வைபிஎம். இஸ்மாயில் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.

 நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் எஸ்.எல். முகம்மது ஹனீபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இந் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விசேட உரையினை உளவள ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் நிகழ்த்தினார்.

விசேடமாக தரம் 1 முதல் 5 வரை இம்மாணவிக்கு கற்பித்த சகல ஆசிரியர்களும் நன்றி உணர்வுடன் நினைவு கூரப்பட்டதுடன் கௌரவமும் வழங்கப்பட்டது.