புதிய அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு




 


(வி.ரி. சகாதேவராஜா)


 இலங்கை அதிபர் சேவை தரம் 3க்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 486 புதிய அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அறிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருந்த இந்த நிகழ்வு எதிர்வரும் நாலாம் தேதி சனிக்கிழமை திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற இருந்தது.

 தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் தேதி திங்கட்கிழமை அதே இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  புதிய அதிபர்கள்  அன்று காலை 7 மணிக்கு மண்டபத்திற்குள் வந்து சேருமாறு பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜி.திசாநாயக்கா தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதிதியாக கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான்  கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்க இருக்கிறார்.