நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன
நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை சகல வாய்ப்புக்களையும் சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சிறுவர் குழுக்கள் அல்லது கழகங்களை தாபிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறுவர் குழுக்கள், கழகங்களை மீளமைத்தல் மற்றும் மாணவர்களுக்கான விஷேட விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
மகிழ்ச்சிகரமான சிறுவர் கழங்களை உருவாக்கி அவற்றின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் சிறுவர் கழக உறுப்பினர்கள் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. பி. யஷோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் பிரதான நிகழ்வு உதவி பிரதேச செயளாலர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா ஆகியோரும் விளையாட்டு பொருட்களை பாடசாலை பொறுப்பாசிரியர்களிடம் வழங்கி வைத்தனர்.
சிறுவர்களுக்கு வாழ்வதற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அமுல்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் சிறுவர் குழுக்களை வலுவூட்டுவதன் மூலம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாதிரி பாடசாலை நிகழ்ச்சித்திட்டம், மற்றும் சிறுவர் பங்கேற்பை விஷ்தரிப்பதற்கான சிறுவர் கழக நிகழ்ச்சித்திட்டம் மற்றும் முறையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறுவர் கழகத்தின் ஊடாக, சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர் நேய கிராமம், சிறுவர்களின் உரிமைகள், கல்வி, பண்பாடு, ஆன்மீக மேம்பாடு, விளையாட்டு, ஆரோக்கியமான வளர்ச்சி, உடற்சுகாதாரம், தலைமைத்துவ ஆற்றல் விருத்தி, கற்றல் இடர்பாடுகளை இனம் கண்டு அவற்றுக்கான குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அடையும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் செயற்படுத்தப்பட உள்ளன.
Post a Comment
Post a Comment