ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலக சாம்பியன் - இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்






 இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது. ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதனைத் தொடரந்து இந்தியா நிர்ணயித்த 241 ரன் இலக்கை டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இரு அணிகளிலும் மாற்றம் இல்லை
இரு அணிகளுமே எந்தவிதமான மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளன. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வினுக்கு இடமில்லை. வழக்கம் போல், ஜடேஜா, குல்தீப் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா, டிராவிஸ் ஹெட் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது பெரிய பலம். இதில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் இருவரும் ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடியவர்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: ரோகித், கோலி, ஷமி 20 ஆண்டு ஏக்கத்தை இன்று தீர்ப்பார்களா?பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி
ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசி ய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் மிட்விக்கெட்டிலும், கவர்ஸ் திசையிலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் ஷார்ட் பாலை, ரோஹித் சர்மா கிராஸ்பேட் ஷாட் மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5வது ஓவரை ஸ்டார்க் வீசினார். 2வது பந்தை மிட்-ஆன் திசையில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஆனால், மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதனால், இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 2வது பந்திலும் அவுட்சைட் ஆஃப்சைடில் வீசப்பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். ஸ்டார்க் வீசிய 3பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.

மேக்ஸ்வெல் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். மேக்ஸ்வெல் பந்துவீச்சை ரோஹித், கோலி நிதானமாகவே அணுகினர். 5வது பந்தில் கோலி பவுண்டரிக்கு அனுப்பினார்.

மேக்ஸ்வெல் 10வது ஓவரை வீசினார். 2வது பந்தில் ரோகித் சர்மா இறங்கிவந்து லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், மூன்றாவது பந்தில் கவர்ஸ் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், 4வது பந்தை ரோகித் கவர் திசையில் அடித்த பந்தை ஓடிச் சென்று டிராவிஸ் ஹெட் அருமையான கேட்ச் பிடித்தார்.

ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது.

பேட் கம்மின்ஸ் 11வது ஓவரை வீசினார். முதல் பந்தை கம்மின்ஸ் லென்த்தில் வீச கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஸ்ரேயாஸ் சந்தித்தார். துல்லியமாக வீசப்ப்பட்ட பந்துக்கு ஸ்ரேயாஸ் தாமதமாக ரெஸ்பான்ஸ் செய்யவே அவுட்சைட் எட்ஜ் எடுத்து கேட்சானது. 4 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

கோலி - லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம்
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தபின் பேட்டிங்கில் சற்று நிதானம் காட்டத் தொடங்கியது. கோலி, ராகுல் இருவரும் ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் பந்துவீச்சை எச்சரிக்கையுடனே கையாண்டனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு, 55 பந்துகளை எடுத்துக்கொண்டது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், ரன் ரேட் வேகமும் குறைந்தது.

இந்திய அணியின் ரன் வேகம் 10 ஓவர்களாகக் குறைந்துவிட்டது. 11வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி களத்தில் நிலைத்து ஆடியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
விராட் கோலி அவுட்
விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த இந்திய அணியின் மந்தமான ஆட்டம் தொடர்ந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது. 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார்

இந்த உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டே ரன்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது நிலைத்து ஆடி இந்தியாவை கரை சேர்த்த இந்த ஜோடி இம்முறையும் சாதிக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சிறிது நேரத்தில் பொய்த்துப் போனது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி 29-வது ஓவரில் பிரிந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை விராட் கோலி தடுத்து ஆட, பேட்டில் பட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்தது.

ராகுல்-கோலி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 67ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்ததது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
ரவீந்திர ஜடேஜா ஏமாற்றம்
ரவிந்திரா ஜடேஜா, ராகுலுடன் சேர்ந்து ஆடினார். சுழற்பந்துவீச்சாளர்கள் மேக்ஸ்வெல், ஆடம்ஸம்பா, ஹெட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆட மிகுந்த சிரமப்பட்டார். பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் 86 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹேசல்வுட் வீசிய 36-வது ஓவரில் ஜடேஜா 9 ரன்னில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய் அணி 5-வது விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் ரன் ரேட் ரோஹித் சர்மா இருந்தபோது, 8 ரன்ரேட்டில் பயணித்தது, ஆனால், 35 ஓவரின்போது 4 ரன்ரேட்டாகக் குறைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் திணறினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
16 ஓவர்களுக்குப் பின் பவுண்டரி
இந்திய அணி கடைசியாக 10 ஓவர்களில் பவுண்டரி அடித்தது. அதன்பின் 16ஓவர்களாக பவுண்டரி அடிக்கவில்லை. ஏறக்குறைய 16 ஓவர்களுக்குப் பின் மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரில் ராகுல் பவுண்டரி அடித்தார்.

20 ஓவர்கள் முதல் 30 ஓவர்கள் வரை இந்திய அணி, 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

28 ஓவர்களில் ஒரு பவுண்டரி
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 28 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. கடைசியாக 10 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததற்கு பின், 27-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், அடுத்த 20 ஓவர்களில் ஒரு பவுண்டரியும் இந்திய அணி அடித்தது. கடைசியாக ஸம்பா வீசிய 39-வது ஓவரின் கடைசிப்பந்தில் சூர்யகுமார் பவுண்டரி அடித்தார்.

ராகுல் விக்கெட்டும் காலி
இந்திய அணி 41-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. 42-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். ஸ்டார்ஸ் வீசிய 3-வது பந்து லேசாக லெக் கட்டராக வந்தது, இதைக் கணிக்காமல் ராகுல் பேட்டை வைக்க பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ராகுல் 66ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி வந்த வேகத்தில் லெக்திசையில் ஒரு பவுண்டரி அடித்தார்.

ஷமியும் வீழ்ந்தார்
ஸ்டார்க் 44வது ஓவரை வீசினார். 250 ரன்கள் சேர்த்துவிட்டால் டிபெண்ட் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சூர்யகுமார், ஷமி பேட் செய்தனர். ஆனால் ஸ்டார்க் வீசிய பந்து நன்றாக ரிவர்ஸ்ஸ்விங் ஆகத் தொடங்கியது. ஸ்டார்க் வீசிய 3-வது பந்து லென்த்துக்கு மேல் வந்ததால் அதை அடிக்க முற்பட்டார் ஷமி ஆனால், பந்து அவரை ஏமாற்றிவிட்டு, பேட்டில்பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ஷமி 6 ரன்னில் வெளியேறினார்.

37 ரன்களுக்கு 4 விக்கெட்
அடுத்து வந்த பும்ராவும் விக்கெட்டை நிலைப்படுத்தப் போராடினார். ஆனால், பும்ரா வந்தவுடன் ஆடம் ஸம்பா பந்துவீச அழைக்கப்பட்டார். ஸம்பா வீசிய 45-வது ஓவரில் பும்ரா கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்திய அணி 178 ரன்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. ஆனால், அதன்பின் 37 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குல்தீப் ஏன் முன்பே களமிறங்கவில்லை?
ஸ்டார்க் வீசிய 46-வது ஓவரில் ஒரு ரன் எடுத்து குல்தீப்பிடம் ஸ்ட்ரைக்கை சூர்யகுமார் ஒப்படைத்தார். ஸ்டார்க் ஓவரை எப்படி சமாளிக்கப் போகிறார் குல்தீப் என்று வியந்த நிலையில் அருமையாக டிபெண்ட் செய்து, ரன்களைச் சேர்த்தார். குல்தீப் யாதவ் டெய்லெண்டராக இருந்தபோதிலும் ஓரளவுக்கு சிறப்பாக பேட் செய்தார். ஆனால், ஏன் ஷமிக்கு முன்பாக குல்தீப்பை களமிறக்கவில்லை என்ற கேள்வியை வர்ணனையாளர்கள் முன்வைத்தனர்.

பந்து வராமலே ஆட்டமிழந்த சூர்யகுமார்
கம்மின்ஸ் 48-வதுஓவரை வீசினார். கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு சூர்யகுமார் தொடக்கத்தில் இருந்தே திணறினார். அவர் வீசிய ஸ்லோ பவுன்ஸரில் ரன் சேர்க்க முடியாமல் பேட்டை சுழற்றினார் சூர்யார். ஆடுகளம் மெதுவாக மாறிவிட்ட நிலையில் ஹேசல்வுட் ஸ்லோ பவுன்ஸர் தொடர்ந்து வீச, சூர்யகுமார் திணறினர். பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்றி குழப்பமடைந்தார். ஹேசல்வுட் வீசிய 3-வது பந்தில், பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்ற பந்து தாமதமாக வந்து கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் சென்றது. சூர்யகுமார் 18 ரன்னில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விரித்த வலையில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சூர்யகுமார் யாதவ் பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை. மிகவும் அருமையான வாய்ப்பாக அமைந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 360 டிகிரி வீரர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
ரசிகர்களை குஷிப்படுத்திய சிராஜ்
50-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். முதல் பந்தில் குல்தீப் ஒரு ரன் எடுக்க, 2வது பந்தை சிராஜ் எதிர்கொண்டார். நீண்ட நேரத்துக்குப்பின் பவுண்டரி அடித்து சிராஜ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசிப்பந்தில் இரு ரன்கள் எடுக்க முயன்று குல்தீப் 10 ரன்னில் ரன் அவுட்ஆகினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து 241 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் என்ன நடந்தது?
உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இதே மைதானத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதனை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 30-வது ஓவரில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் இந்தியா பதிலடி
241 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 1.30 லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குத் தெரியும்.

இதனால் தொடக்கம் முதலே மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பந்துகளையும் எதிர்கொண்டனர். பும்ரா வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார்.

இந்த உலகக் கோப்பை முழுவதும் ஷமியின் பந்துவீச்சு மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியநிலையில் அவர் 2வது ஓவரை வீச வந்தார். ஷமி வீசிய ஓவரில் 2வது பந்து ஆஃதிசையில் விலகிச் செல்லவே அதை வார்னர் தொட, ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்சானது. வார்னர் 7 ரன்னில் வெளியேறினார். வார்னர் விக்கெட்டை ஷமி வீழ்த்தியவுடன் அரங்கில் இருந்த ரசிகர்களின் முழக்கம், அரங்கையே அதிரவைத்தது.

அடுத்து மிட்ஷெல் மார்ஷ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவருமே ஆபத்தான பேட்டர்கள் என்பதால், இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 3-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

ஷமி வீசிய 4-வது ஓவரை மார்ஷ் சந்தித்தார். 3-வது பந்தில் மிட்-ஆஃப் திசையில் மார்ஷ் சிக்ஸர் விளாச, ரசிகர்கள் அனைவரையும் நிசப்தமாக்கினார். 4-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக ஈட்டிபோல் இறங்கியதால் மார்ஷ் எதிர்கொள்ளத் திணறினார். 3-வது பந்தை அடிக்க முற்பட்டு, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
டிஆர்எஸ்-ஸை தவறவிட்ட ஸ்மித்
அடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 6-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே சேர்த்தது. 7-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் பந்துவீச்சில் அனல் தெறித்தது, துல்லியத்தன்மையும், லைன்லென்த்தும் கச்சிதமாகவும் இருந்ததால் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் தடுமாறினார். இருப்பினும் 4-வது பந்தில் மிட்ஆன் திசையில் ஸ்மித் பவுண்டரி அடித்தார்.

கடைசிப் பந்தை ஸ்மித்துக்கு ஸ்லோவாக பும்ரா வீசினார். ஆனால் சற்றும் எதிர்பாராத ஸ்மித் கால்காப்பில் வாங்கினார்.இந்திய வீரர்களின் கோரிக்கையால், களநடுவரும் அவுட் வழங்கினார்.

இதற்கு டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித்தும் மவுனமாக வெளியேறினார். ஆனால், ஸ்மித் சென்றபின் பால்டிராக்கிங்கில் பார்த்தபோது பந்து ஸ்டெம்பில் படவில்லை என்பது தெரியவந்தது. டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித் தவறு செய்து, விக்கெட்டை இழந்து 4 ரன்னில் வெளியேறினார்.

பும்ரா 2வது விக்கெட்டை வீழ்த்தியதும் அரங்கில் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கரகோஷத்தாலும், முழக்கத்தாலும் ஆரவாரம் செய்த சத்தம் விண்ணைப் முட்டியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
அடுத்து லபுஷேன் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தார். ஷமி வீசிய 8-வது ஓவர் மெய்டனாக அமைந்தது. பும்ரா வீசிய 9-வது ஓவரும் மெய்டனாக வீசினார். இரு ஓவர்களையும் பும்ரா, ஷமியும் மெய்டன்களாக வீசி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். ஷமி வீசிய 10-வது ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா அடுத்த 10 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.

டிராவிஸ் ஹெட் அரைசதம்
21-வது ஓவரை குல்தீப் வீசினார். 2வது பந்தில் ஹெட் ஒரு ரன் எடுத்து, 58-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். கடும் நெருக்கடி, அழுதத்துக்கு மத்தியில் நிலைத்து ஆடி, ஹெட் சிறப்பாக அரைசதம் அடித்தார். குல்தீப் வீசிய 3-வது பந்தில் லாபுஷேன் பவுண்டரி விளாசினார். கடைசி 5 ஓவர்களில் 24 ரன்கள்வரை ஆஸ்திரேலியா சேர்த்தால் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஷமி வீசிய 23-வது ஓவரில் ஹெட் பவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்தார். அடுத்து, ஜடேஜா வீசிய 25-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட் பவுண்டரி விளாசினார். 25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135ரன்கள் சேர்த்து வெற்றஇயை நோக்கி நகர்ந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
உதிரிகளால் பாதிப்பு
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் உதிரிகள் எண்ணிக்கையில் 17 ரன்களை கொடுத்திருந்தது. இது இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 11 முதல் 15-ஓவர்கள் வரை குல்தீப் யாதவும், ஜடேஜாவும் மாறி, மாறி பந்துவீசினர், ஆனால், ஆஸ்திரேலிய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தும் நோக்கில் பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. ஆனால் குல்தீப் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்து தவறாக வீசப்படவே காத்திருந்த ஹெட் அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

44 ஆண்டுகளுக்குப் பின்..
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் 15 ஓவர்களுக்கும் மேல் உலகக் கோப்பையில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தாமல் செல்வது ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் நடக்கிறது. கடைசியாக 1979ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் இன்றி இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகே வந்தது. பும்ரா வீசிய 40-வது ஓவரிலும், சிராஜ்வீசிய 41-வது ஓவரிலும் லாபுஷேன் பவுண்டரி விளாசி வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றார்.

43-வது ஓவரை சிராஜ் வீசினார். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்களே தேவைப்பட்டது. சிராஜ் ஓவரில் பவுண்டரி அடித்த ஹெட் 5-வது பந்தில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஹெட்-லாபுஷேன் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடு்த்து வந்த மேக்ஸ்வெல் வெற்றிக்கான 2 ரன்களை அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். 43 ஓவர்களில்ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண செல்லாதது ஏன்?
ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க தாம் அழைக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்திற்கு ஏன் செல்லவில்லை என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போது பதிலளித்த கபில்தேவிடம் ,"நீங்கள் என்னை அழைத்தீர்கள், நான் இங்கு வந்தேன், அவர்கள் என்னை அழைக்கவில்லை, நான் செல்லவில்லை" என்றார்.

"1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற எனது முழு அணியையும் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் நிறைய வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எவ்வளவு பேர் இருக்கிறார்கள், சில நேரங்களில் மக்கள் மறந்துவிடக்கூடிய பொறுப்புகள் அதிகம்." என்று கபில்தேவ் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,ANI
உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பிரபலங்கள் கூறியது என்ன?
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணிக்கு 242 எனும் சுமாரான இலக்கை இந்தியா நிர்ணயத்துள்ளதால் இந்திய அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தியா சார்பாக அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பிரபலங்கள் X சமூக வலைதளத்தில் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிகமாக மெதுவான வந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “மெதுவான பவுன்சரை சரியாக அடிப்பது மிகவும் கடினம். அந்த பந்து வெளியிடப்பட்டவுடன் உள்ளுணர்வு வேலை செய்கிறது பின்னர் இது ஒரு மெதுவான பந்து என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அந்த பந்தை நீங்கள் அடிப்பதற்கு தாமதமாகிவிடுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான சைமன் ஹூக்ஸ் கூறுகையில்,“ 241 ரன்களை அடிக்க வேண்டும். இந்த எண்ணை இதற்கு முன்பு எங்கோ கேள்விபட்டுள்ளோம். இந்தப் போட்டியும் 2019 இறுதிப்போட்டி போல பரபரப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும். பேட் கம்மிங்ஸ் வெற்றி ரன்களை அடிப்பார்” எனத் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
ராபின் உத்தப்பா கூறுகையில், “பேட்டிங் செய்ய கடினமான விக்கெட் ஆனால் நிச்சயமாக இந்தியா இன்னும் சில ரன்கள் அடித்திருக்கலாம் என விரும்பியிருக்கும். ஆட்டத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆரம்ப விக்கெட்டுகள் தீர்மானிக்கும். இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஷமிக்குமான போட்டியை பார்க்க காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
நடுவர் இவரா? இந்திய ரசிகர்கள் புலம்பல்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், போட்டி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

சிலர் அவரை இந்திய அணிக்கு துரதிர்ஷ்டமான அம்பையர் என அழைக்கிறார்கள். மற்றவர்கள் இந்த கூற்றுகள் அனைத்தையும் இந்திய அணி வெற்றியின் மூலம் தவறென நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருவதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இந்திய அணிக்கு துரதிர்ஷடம்தானா என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,X
அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 4 ரன்களும் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ தொடர்பான பல ட்வீட்கள் சமூக ஊடக தளத்தில் காணப்படுகின்றன

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,X
ரோஹித் சாதனை
இந்தியா vs ஆஸ்திரேலியா: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 581 ரன்கள் விளாசி, வில்லியம்ஸன் 2019ஆம் ஆண்டு 578 ரன்கள் சேர்த்திருந்ததை முறியடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ஜெயிலர் இசையில் கோலி
அடுத்தாக கிங் கோலி களமிறங்கினார். கோலி களமிறங்கும்போது, அரங்கில் ஜெயிலர் படத்தின் பின்னணி இசை முழக்கத்துடன் வந்தார், அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரோஹித் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்தது.

மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் இதுவரை கோலி 150 பந்துகளைச் சந்தித்துள்ளார். இதில் கோலி மொத்தம் 148 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சிக்ஸர், 10பவுண்டர் விளாசிய கோலி, ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

உலகக்கோப்பை IND vs AUS: பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன்? வியூகம் என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
"இந்தியா வெல்லும்"
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், "Come on Team India" என்று பாஜக X தளத்தில் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதை ரீட்வீட் செய்த காங்கிரஸ் கட்சி, "JEETEGA INDIA" இந்தியா வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியையும் இந்தியா கூட்டணியையும் மறைமுகமாக குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா: ரோகித், கோலி, ஷமி 20 ஆண்டு ஏக்கத்தை இன்று தீர்ப்பார்களா?
டாஸ் யாருக்கு சாதகம்?
உலகக்கோப்பை IND vs AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. மைதானத்தில் உள்ள 5ஆம் எண் ஆடுகளம் போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆடுகளம், “இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்த மைதானத்தைவிட சற்று வித்தியாசமானது. இந்த ஆடுகளம் நன்கு காய்ந்துள்ளது, அதிகமாக ரோலிங் செய்யப்படவில்லை.

ஆடுகளம் நன்கு காய்ந்து, ஆங்காங்கே திட்டுத் திட்டாக சமனற்று இருக்கிறது. இந்த இடங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால் நன்கு ட்ர்ன் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து நன்கு டர்ன் ஆகியிருக்காது.

இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தால், ரன் ஸ்கோர் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்ப்பது அவசியம். இந்தியா போன்ற வலிமையான அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரன்களைச் சேர்த்துவிடும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் ஸம்பா பந்துவீச்சு முக்கியத்துருப்புச்சீட்டாக இருக்கும்.

நரேந்திர மோதி மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மூன்று போட்டிகளில், இரண்டாவது பேட் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது.ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அது ஆஸ்திரேலியாவாகும்.

இந்தியா இந்த உலகக் கோப்பை போட்டியில் நரேந்திர மோதி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி,வெற்றி பெற்றது.

இந்த மைதானத்தில் இது வரை ஆடிய எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை.

உலகக்கோப்பை IND vs AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?
ஆதலால், முதலில் இந்திய அணி பேட் செய்தால் ரன் சேர்ப்பது சிரமமாக இருக்கும், ரன் சேர்ப்பதும் எளிதாக இருக்காது. நேரம் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாகி, பந்து நன்றாக டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும்.

அப்போது இந்திய பேட்டர்கள் கனித்து ஆடுவது அவசியம். இல்லாவிட்டால், விக்கெட்டுகளை இழக்கவும் நேரிடலாம். 15 ஓவர்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி ஸ்லிப் வைத்து ஆடம் ஸம்பாவை பந்துவீச வைத்தாலும் வியப்பேதும் இல்லை.

அந்த அளவுக்கு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். அதிலும் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய பேட்டர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.

சமனற்ற இடத்தில் பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால், பேட்டர்கள் எதிர்பாராத அளவுக்கு பந்து டர்ன் ஆகலாம். இந்திய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தி சற்று பொறுமையாக ஆடி 250 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் இந்த ரன்களை சேஸிங் செய்வது கடினமாக இருக்கும்.

மாலை 5 மணிக்கு மேல் விழும் பனிப்பொழிவு சேஸிங்கில் முக்கியப் பங்கு வகிக்கும். காலநிலை குளிர்ச்சியாக மாறி, காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிட்டால், பந்து பேட்டர்களை நோக்கி வரத் தொடங்கும்.

சேஸிங் எளிதாக மாறிவிடலாம். ஆதலால் முதலில் பேட் செய்யும் அணி ஸ்கோர் செய்வதைப் பொறுத்து போட்டியின் முடிவு அமையும்.