பெண் வீராங்கனையை முத்தமிட்டவருக்கு 3 ஆண்டு தடை




 


ஸ்பெயினின் முன்னாள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கால்பந்தாட்ட தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளதாக உலக உதைபந்தாட்ட நிர்வாகக் குழு பீபா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.


ஒகஸ்ட் 20 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றதைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஸ்பெயின் முன்கள வீரர் ஜென்னி ஹெர்மோசோவுக்கு முத்தம் கொடுத்ததால் ரூபியால்ஸ் ஒழுங்கு விதிகளை மீறியதாக பீபா கண்டறிந்தது.


2026 ஆம் ஆண்டு ஆடவர் உலகக் கிண்ணம் முடியும் வரை ரூபியேல்ஸ் கால்பந்தாட்டத்தில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 2027ல் இடம்பெறவுள்ள அடுத்த மகளிர் போட்டிக்கு முன்னதாக அவரது தடை காலாவதியாகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.