( எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் கத்தார் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற"ஸஹிரியன்ஸ் பேட்மிண்டன் "சுற்றுப்போட்டி யின் சாம்பியனாக(Shuttle Hunder)அணி தனதாக்கிக் கொண்டது.
கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் கத்தார் கிளை ஒன்றினைந்து ஏற்பாடு செய்த ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி (சீசன்1)Zahirians Badminon Premier League - 2023 (Season -1) கத்தார் ஆல்பா கேம்பிரிட்ஜ் பாடசாலையின் உள்ளக விளையாட்டு அரங்கில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் கத்தார் கிளையின் தலைவர் முகம்மட் பாயிஸ் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் சுற்று போட்டியில் இறுதிப்போட்டிக்கு Shuttle Hunderஅணி மற்றும் NS Smashes Doha அணியும் தெரிவு செய்யப்பட்டது.
மூன்று சுற்றுக்களில் இடம் பெற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டி அப்ராத் மற்றும் பராஜி Shuttle Hunder அணியினர் இரு சுற்றில் வெற்றி பெற்று ஸஹிரியன்ஸ் பேட்மிண்டன் "சுற்றுப்போட்டியின் (சீசன்1)சாம்பியனாக தெரிவானர்கள் மேலும் போட்டிகளில் பங்கு பற்றி ய வர்களுக்கு சான்றிதழில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த சுமார் 37 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ சேவையில் தனித்துவம் பெற்று சிறப்பாக இயங்கிவரும் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரதான அனுசரணையில் இடம்பெற்ற போட்டியில் பிரதம அதிதியாக கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவரும் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முதல்வருமான வைத்தியர் எம்.ரிஸான் ஜெமீல் உட்பட கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment
Post a Comment