நியமனம்!





 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் நியமனம்!


நூருல் ஹுதா உமர் !


இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சாய்ந்தமருதை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தேர்தல்கள் மறுசீரமைப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மேற்படி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் கடந்த காலங்களில் இலங்கை பொது சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும், அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவில் மேலும் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சனாதிபதி சட்டத்தரணி கௌரவ வெவகே பிரியசாத் ஜெராட் டெப், சுந்தரம் அருமைநாயகம், சேனாநாயக்க அலிசெண்ட்ரலாகே, சனாதிபதி சட்டத்தரணி நலின் ஜயந்த அபேசேகர, ரஜித நவீன் கிரிஸ்டோபர் சேனாரத்ன பெரேரா, சாகரிகா தெல்கொட, எஸ்தர் சிறியானி நிமல்கா பிரணாந்து, விதாரணகே தீபானி சமந்த ரொட்ரிகோ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.