MIM இப்றாஹீம்.
அன்புக்குரிய நண்பர் "கலைநிலா"
உவைஸ் ஷெரீப் அவர்களது மறைவு
கவலை தருகிறது! போட்டி பொறாமைகள்
நிறைந்த கலையுலகில் எவரோடும்
பகைமை பாராட்டாது அனைவரையும்
அனுசரித்து மக்கள் மத்தியில் தமக்கொரு
தனியிடத்தை வகித்துக் கொண்டு
கடைசிவரை தனது நற்பெயரைத்
தக்கவைக்க ஒரு பண்பான ஒருவரை
நாம் இழந்துவிட்டோம்..ஆர்ப்பாட்டம் இல்லாமல் கலைத்துறையில் நிறைய
சாதனைகள் புரிந்த நண்பர் உவைஸ்
ஷெரீப் எவர் மனதையும் புண்படுத்தாது
வாழ்ந்து மறைந்துவிட்டார்.. கடைசியாக
அவரது புதல்வியின் மணவிழாவில்தான்
சந்திக்க முடிந்தது! இன்று (2023.10.04)
இறையழைப்டை ஏற்ற சேதி கிடைத்திருக்கிறது!
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து
மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸை அருள
இதயபூர்வமாக இறைஞ்சுவோம்!!
Post a Comment