வாணி விழா பூஜை




 


வி.சுகிர்தகுமார் 0777113659  

விஜயதசமி தினமான இன்று வாணி விழா 
பூஜைகளும் கலை நிகழ்வுகளும் அரச அலுவலகங்களிலும்  இன்று (24)சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கல்வித்தெய்வமான கலைவாணிக்கான விழாவில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பக்திப்பாடல்கள் நிகழ்வுகளோடு ஆரம்பமான வாணி விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இதன் பின்னராக பூஜைவழிபாடுகள் இடம்பெற்றதுடன் அரசாங்க அதிபர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டாhர். தொடர்ந்து கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அரசாங்க அதிபரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் பொதுமக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளால் கையளிக்கப்பட்டன.
நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் பிரகஸ்பதி உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.