கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் தேசிய மீலாத் விழா





 (வி.ரி.சகாதேவராஜா)

 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் தேசிய மீலாத் விழா கல்லூரி அதிபர் அருட்
சகோதரர்  ரெஜினோல்ட் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது .

பிரதம அதிதியாக கல்முனை  வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பணிப்பாளர் எம்எச் எம் ஜாபீர் கலந்து சிறப்பித்தார்.

 சிறப்பதிதிகளாக கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி வரணியா திருமதி றியாசா உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எஸ்.ஹதிசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
கல்லூரியின் மீலாத் விழா குழுத் தலைவர் ஏ.ஆதம்பாவா வரவேற்புரை நிகழ்த்த
 பிரதம பேச்சாளர் மௌலவி பஸில் எம் பதுறுரதீன்  சிறப்புரையாற்றினார்.

 நிகழ்வில் மீலாத் விழா போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடை ஏறின.