முற்றாக எரிந்த வீடு,உதவி கோரும் குடும்பம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் இன்று (2) வீடொன்று முற்றாக எரிந்து சாம்பலானது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் வருமானம் குறைந்த குடும்பமொன்று வாழ்ந்து வந்த சிறிய வீடொன்றே இவ்வாறு தீக்கு இரையானது.
தீயில் வீட்டில் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் ஒளிரூட்டிக்கான பற்றரிகள் விற்பனைக்கு தயராவிருந்த பாய்கள்; ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமான நிலையில் அக்குடும்பத்தின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கணவனும் மனைவியும் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில் கணவன் வழமைபோன்று தொழிலுக்காக சென்ற நிலையில் மனைவி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போதே வீட்டில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டபோது அருகில் கோளாவில் உப பொலிஸ் நிலையம் அமைந்துள்ள நிலையில் அவர்களது உதவி கோரப்பட்டும் யாரும் உதவி செய்யவில்லை என வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட பலர் கவலை தெரிவித்தார்.
அத்தோடு தமது உடமைகள் யாவும் இழந்துள்ள நிலையில் மிகவும் கஷ்டத்தில் வாழும் தமது குடும்பத்திற்கு உதவி புரியுமாறு அரசிடமும் நிறுவனங்களிடமும் வீட்டு உரிமையாளர் கோரிக்கை விடுத்தார்.