அபு அலா -
அம்பாறை - பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த அல் ஹாஜ் மர்ஹும் யூ.எல்.மஹ்மூத்கான் மற்றும் ஹாஜியானி மர்ஹூமா ஏ.எல்.சவுதா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.எம்.இப்னு அஸார் என்பவர் பொலிஸ் அத்தியட்சகராக (SP) பதவியுயர்வு பெருகிறார்.
இவர் தனது பதவிக் காலத்தில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், லஹுகலை, கொழும்பு, கிளிநொச்சி போன்ற பல்வேறு இடங்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த நிலையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக (ASP) பதவியுயர்வு பெற்றார்.
இவரின் தொடரான முயற்சியின் பின்னார், காவல்துறை பதவி நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் (Superintendent of Police) எனும் உயர்வுக்குச் செல்வதற்கான தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய 275 பேரில் 154 பேர் சித்தியடைந்தனர். இவர்களில் ஒருவராக இப்னு அஸாரும் உள்ளடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment