பரிசளிப்பு விழா ..!





 ( எம்.என்.எம்.அப்ராஸ்) 



 கல்முனை ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீடத்தின் நான்கு வருட பூர்த்தியும்,பரிசளிப்பு விழாவும் கல்முனை ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில்(14) இடம்பெற்றது. 


 ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீட அதிபரும்,நிந்தவூர் றப்பானிய்யா இஸ்லாமிய கற்கை நிறுவகத்தின் விரிவுரையாளருமான அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் எம்.ஐ.ஹாஜா அலாவுதீன் (ஹிழ்ரி)(ஆஷிக் அலி)அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹிப்ழு கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 



 இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை தலைவர் அல்ஆலிம்,அஷ்-ஷெய்க் அல்-முப்தி ஏ.எல்.எம்.முர்ஷித்,கெளரவ அதிதியாக கல்முனை மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.அப்துர் ரஊப்,விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை உப தலைவர் அல்ஆலிம்,அஷ்-ஷெய்க் அல்-முப்தி கே.எல்.சியானுத்தீன் மற்றும் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர்,உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள்,மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.