கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் உளநல தினம்




 


(வி.சுகிர்தகுமார் 0777113659 )


 உலக உளநல தினம் நேற்று  அனுஸ்டிக்கப்பட்டது.
இதற்கமைவாக பாடசாலைகள் தோறும் உள நல விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் பாடசாலை அதிபர் மு.சண்டேஸ்வரன் தலைமையில் இன்று உள நல விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
உள நலம் உலகளாவிய மனித உரிமையாகும் எனும் கருப்பொருளுக்கமைய பாடசாலையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் மாணவர்கள் மத்தியில் உள நலம் தொடர்பான அறிவுரைகளை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
இதன் பின்னராக விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை தாங்கியவாறு பாடாசலையில் இருந்து நடை பவனியாகவும் துவிச்சக்கரவண்டி மூலமும் அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து அங்கு சில நிமிடங்கள் தரித்திருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.