வாணிவிழா!




 


( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த வாணி விழா நேற்று(23)திங்கட்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..

 ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து ஆசி வழங்கினார்.

கல்முனை ஆதாரவைத்திசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.  முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
ரி.ஜே.அதிசயராஜ், பிரதம குரு சிவஸ்ரீ கோபால நிரோஷன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து , தொழிலதிபர் பிரகலதன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் ரி.கதீசன்ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டார்கள்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.