பாற்குடபவனி






 



வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று சின்னக்குளம் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழாவின் பாற்குடபவனி நேற்று (19) பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வம்மியடிப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்களின் தலைமையிலான பூஜை வழிபாடுகளோடு ஆரம்பமான பாற்குடபவனியில் வீரம்மாகாளியம்மன் ஆலய தலைவர் பி.பிராசந்தன் உள்ளிட்ட ஆலய அறங்காவலர்கள் உற்சவகாலகுரு உற்சாடனபானு சிவத்திரு இ.யோகானந்தம் உதவிக்குருமார்களான சக்தி பிரியன்; சிவத்திரு சோ.கஜேந்திரன் இளஞ்சுடர் சிவத்திரு யோ.மோகன்ராஜ் காளியின் மைந்தன் சிவத்திரு ஜெ.ஜெயரூபன் சக்திதாசன் ;சிவத்திரு வி.நிசாந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பாற்குடபவனியை ஆரம்பித்து வைத்தனர்.
வம்மியடிப்பிள்ளையாருக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் பாற்குடவபனி பக்தர்களின் ஆரோகாரா எனும் வேண்டுதலுக்கு மத்தியில் ஆரம்பமானது. கிராமத்தின் பிரதான வீதிகளினூடாக சென்று ஆலயத்தை வந்தடைந்ததன் பின்னர் அம்மனுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றதுடன் விசேட பூஜைகளும் இடம்பெற்றன.
கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கானது  அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து 19ஆம் திகதி நேற்று இடம்பெற்ற பாற்குடபவனியுடனும்; 20,21 ஆம்  திகதிகளில் இடம்பெறும் அம்மனின் உள்வீதி உலா வருதலுடனும் 22ஆம் திகதி காவடி ஆட்டங்களுடன் இடம்பெறும் வெளிவீதி மற்றும் கிராம சுற்றுலாவுடனும்; 23ஆம் திகதி இடம்பெறும் சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் 24ஆம் திகதி அதிகாலை இடம்பெறும் பக்தி ததும்பும் தீமிதிப்பு 31 ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறவுள்ளது.