இறுவட்டு வெளியீடு





 (வி.ரி. சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு ஆலய பரிபாலன சபைத் தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தலைமையில் நேற்று (12) இரவு இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஆலய பூசகர் ஆலய பரிபாலன சபையினர் ஏனைய ஆலயங்களின் பரிபாலன சபையினர் அறக்கட்டளை நிதியத்தின் குடும்பத்தினர் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.