சிறுவர் தின நிகழ்வு




 


நூருல் ஹுதா உமர் 


 கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா தலைமையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியா ஆலோசகர்கள், வளவாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வின் விஷேட அம்சமாக 'சிறுவர் எதிர்காலம்' எனும் கருப் பொருளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லுாரி மாணவர்களின் வீதி நாடகமொன்றும் இடம் பெற்றது. 

ஊர்வலம், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் உட்படப் பலவும் அரங்கேறின. மாணவர்களுக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.