பதவியேற்பு!





 (  வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாண பதில் மாகாண கல்விப் பணிப்பாளராக  மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இன்று திங்கட்கிழமை (02) கடமையேற்றார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள் நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர
உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டவர்.

இள வயதில் மட்டு. வின்சென்ட் மகளிர்
தேசிய பாடசாலை அதிபராகவும் கடந்த நான்கு வருடங்களாக மட்டு. வலயக் கல்விப் பணிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.

இவர், மிக இளவயதில் மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ளார். இவர் 1935 வரை கடமையாற்ற வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக பெண்மணிகள் மாகாண கல்வி பணிப்பாளர் பதவியை அலங்கரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில்  திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தொடர்ந்து செல்வி.அகிலா கனகசூரியம்  இன்று திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பதவியேற்றுள்ளார்.