நூருல் ஹுதா உமர்
கல்குடா கல்வி வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதிகஷ்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் நா. தயாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஏழை மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்தும் உ தவிக்கரம் நீட்டி வரும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ. கஜரூபன், சி.காந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பனவற்றை வழங்கி வைத்தனர்.
இணைந்த கரங்கள் அமைப்பு கல்விற்கான சேவையை ஆரம்பித்து ஒரு வருட காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment