உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 2023.10.03 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.ஆஸாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் கௌரவ அதிதியாகவும், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய கண்காணிப்பு செயல்முறையின் கீழ் நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறந்த செயல் திறனுக்கான தேசிய மதிப்பியலில் வெளி நோயாளர் பிரிவினை சிறப்பாக முகாமைத்துவம் செய்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை முதலாம் இடத்தினை வகித்து அண்மையில் தேசிய விருதினை பெற்றுக் கொண்டது.
குறித்த விருதினைப் பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment