நூருல் ஹுதா உமர்
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில், புதிதாய் இணைந்து கொண்டுள்ள முதலாம் வருட மாணவர்களுக்காக, கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திசைமுகப்படுத்தும் தொடர் நிகழ்ச்சியில், ஒரு நிகழ்ச்சியாக "இளைஞர்கள் எதிர்நோக்கும் பாலியல் சவால்கள்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வூட்டல் இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியக் கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம். என். எம். தில்ஷான் கலந்து கொண்டு இளைஞர்கள் எதிர்நோக்கும் பாலியல் சவால்கள் தொடர்பில் சிறப்பு விரிவுரை நடத்தினார்.
Post a Comment
Post a Comment