(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை கல்வி,கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் பள்ளி ஒழுங்கையில் அமைந்துள்ள எக்டோ(ECDOO) நூலகத்தில் இடம்பெற்றது.
தாபனத்தின் தலைவர் எஸ்.எல்.எம் றிஸாத் தலைமையில் நடைபெற்ற அங்குரார்பன நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,கெளரவ அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.ரஹ்மான் அவர்களின் வழிகாட்டலில் வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பாளர் வைத்தியர் சி.மருதராஜன் அவர்களும் வைத்தியசாலை அதிகாரிகளும், ஊழியர்களும், தாபனத்தின் சார்பாக செயலாளர் எஸ். எம். நபீல், பொருளாளர் யூ.கே.எம்.சியாம், அங்கத்தவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த இரத்ததான முகாமில் அதிகமான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து கலந்துகொண்டிருந்தமை விஷேட அம்சமாகும். மேலும் எக்டோ தாபனமானது சுமார் இருபது வருடத்திற்கும் மேலாக கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment
Post a Comment