நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கு முகமாக தென்கிழக்கு பல்கலைகழக வளாகம் இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது பிரதான நிகழ்வாக மர்ஹூம் அஷ்ரப் நினைவுப் பேருரை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதம அதீதியாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஷ்ரப் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
அத்துடன் 350 மில்லியன் ரூபா செலவில் பல்கலைகழக உத்தியோகத்தர்களுக்கான 4 மாடிகள் கொண்ட இரு வீட்டுத் தொகுதிகள் திறப்புவிழா, மர நடுகை, மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், குறுந்திரைப்பட வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகள், புத்தக கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டி உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சமூகமயப்படுத்தி மக்களுடன் இணைக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைகழகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடங்கள், நூலகம் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று அங்கு காட்சிப்படுத்தப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளிக்க முடியும்.
Post a Comment
Post a Comment