விசேட சந்திப்பு





 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



அகில இலங்கை கல்விசார் கல்விசாரா ஊழியர் சங்கம் மற்றும் அகில இலங்கை ஐக்கிய கல்விச்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், அம்பாறை மாவட்ட கல்விசாரா ஊழியர்கள் சங்கத்திற்கிடையில் இவ் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விசேட சந்திப்பு சனிக்கிழமை (28) நிந்தவூர் அட்டப்பளத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 

 அம்பாறை மாவட்ட கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஐ.ஏ.சிறாஜ் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், அகில இலங்கை கல்வி சார் கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தேஷபந்து மத்தும பண்டார,அகில இலங்கை ஐக்கிய கல்விச் சங்கத்தின் தலைவர் குமுது கட்டுப்பொலகே உட்பட சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மாகாண பாடசாலைகளில் இல்லாமல் ஆக்கப்பட்ட பதவிகள் மீண்டும் உருவாக்கப்பட்டு நியமனம் வழங்கப்படல்,கல்விசாரா ஊழியர்களின் கடமை நேரங்களில் காவலாளி தவிர்ந்த ஏனையோருக்கு நேர மாற்றம் கொண்டு வரப்படல்,கஸ்டப்பிரதேசம் மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படல் போன்ற பத்து அம்சங்களை உள்ளடக்கிய மகஜர் இரண்டு சங்கத்திடமும் இதன்போது ஒப்படைக்கப்பட்டது. 


கல்வி அமைச்சர்,கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சந்தித்து இவ்வாறான சகல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு இவர்களின் அனுமதியினை பெற்றுள்ளோம், அதனடிப்படையில் அவர்களை சந்தித்து கல்விசார ஊழியர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவோம். 


இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டாப்படாதவிடத்து நாடு பூராவும் உள்ள கல்விசார ஊழியர்களை ஒன்றினைத்து கொழும்பில் பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று அகில இலங்கை கல்வி சார் கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தேஷபந்து மத்தும பண்டார தனதுரையில் தெரிவித்தார்.