சிறுவர்தின நிகழ்வுகள் !





 ( வி.ரி. சகாதேவராஜா)


சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தி தாபனம் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக பல நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது.

''அனைத்து சிறுவர்களையும் உள்வாங்கிக்கொள்'' என்ற 2023 ஆம் ஆண்டு சிறுவர்தின 
தொனிப்பொருளுக்கு அமைய மனித அபிவிருத்தி தாபனம் (HDO) பல்வேறு செயற்பாடுகளை 
கண்டி, நுவரெலியா, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்துள்ளது. 

இதன் பிரதான நிகழ்வு இன்று முதலாம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை 
பிரதேசத்தில் நடைப்பெறவுள்ளது என தாபன இணைப்பாளர் பி.சிறிகாந்த் தெரிவித்தார்.

 
இது தொடர்பாக திட்டமிடல் கூட்டம் அண்மையில் மனித அபிவிருத்தி தாபனத்தின் 
கொட்டகலை காரியாலயத்தில் நடைப்பெற்றது.

 இச்செயற்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் 
ஆணைக்குழு, பிரதேச செயலகங்கள், பொது சுகாதாரத்துறையினர், தேசிய சிறுவர் அதிகார 
சபை, நன்நடத்தை அலகு, பொலிஸ், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை 
இணைத்து நடாத்த திட்டமிட்டுள்ளனர்.