உலக உணவு தினத்தை முன்னிட்டு




 


நூருல் ஹுதா உமர்


உலக உணவு தினமான 2023.10.16ம் திகதி திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக சுதேச வைத்திய பிரிவில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.றிஜாஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் உலக உணவு தினத்தை முன்னிட்ட சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

அந்தவகையில் உலக உணவு தின விழிப்பூட்டல் நிகழ்வானது இறக்காமம் கமு/சது/மாணிக்கமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றதுடன் இலை கஞ்சி தயாரித்தல் மற்றும் அதனால் கிடைக்கின்ற நன்மைகள்” எனும் தலைப்பில் இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் அவர்களால் சிறப்பு உரை இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குதல் தொடர்பான விளக்கங்களையும் தெளிவுபடுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஐ.எல்.பரீட் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு இலை கஞ்சி அருந்தி உற்சாகம் அளித்தனர்.