ஓய்வு பெற்றார்.




 


நூருல் ஹுதா உமர்


கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வந்த திருமதி நபீமா பளீல் (SLTS –Class -1) அவர்கள் இன்று முதல் (02-10-2023) தனது 31 வருடகால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

திருமதி நபீமா பளீல் பழைய தபாலக வீதி, கல்முனையை வசிப்பிடமாகக் கொண்டவர். இவர் 1992-06-01 ஆந் திகதி கமு/ கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று அதன் பின்னர் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றி பின்னர் 2014.01.25 ஆந் திகதி முதல் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வந்த நிலையில் தனது 31 வருடகால சேவையின் பின்னர் இன்று முதல் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

ஆசிரியையின் 31வருட சேவையைப் பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு ஜீ.எம்.எம் பாடசாலையின் ஆசிரியர் நலன்புரி அமைப்பினால் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இன்று மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.