வி.சுகிர்தகுமார் 0777113659
கல்வி அமைச்சின் முன்பாக ஆசிரியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆசிரியர்கள் ஒன்றினைந்து பாடசாலை முன்பாக இன்று (27) பிற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பினை தெரிவிக்குமாறு அதிபர் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பல்வேறு சுலோக அட்டைகளையும் தாங்கி நின்றனர்.
அதிபர் ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி நடாத்தப்படும் மிலேச்சத்தனமாக தாக்குதல்களை கண்டிப்பதுடன் பொலிசாரை கொண்டு ஆசிரியர்களை அடக்குமுறை செய்வது நிறுத்தப்படவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஆசிரிய சமூகம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததுடன் ஊடகங்களுக்கு கருத்தினையும் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment