நூருல் ஹுதா உமர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலையான கமு/சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியின் ஏற்பாட்டில் "எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக மாணவச் செல்வங்களின் பெறுமதியை உலகத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில் மாணவர் மனங்களில் சந்தோசத்தைத் தூவும் வகையில்
"இன்றும் மகத்துவம்" எனும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம்.பஜீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கமு/ சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று தற்போது உயர்தர பரீட்சையிலே மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களுக்குத் தெரிவான இக்கல்லூரியின் பழைய மாணவர்களான ஆர்.முஹம்மட் இம்தாத், எம்.எப்.சநௌபர் ஜஹான், ஜே.பாத்திமா றிமா ஆகியயோரை இன்றைய நிகழ்வின் அதிதிகளாக வரவேற்று,
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரிய ஆலோசகர் ஆகியோர் இணைந்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இக்கல்லூரி மாணவர்களுக்கான பலூன் உடைத்தல் போட்டியும் இடம்பெற்ற அதேவேளை கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டு பிரதேச,மாவட்ட, மாகாண மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுன
Post a Comment
Post a Comment