மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற் திட்டத்தின் கீழ் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தார் அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மருதமுனை B4U வேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களுடன் கலந்துரையாடல் மருதமுனை ஆத்தியடி தோப்பில் இன்று இடம் பெற்றது.
இதன் போது மருதமுனை B4U வேரிஸ் விளையாட்டு கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள் மற்றும் கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன்,
விளையாட்டு கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் மருதமுனை இளைஞர் கழகங்களுக்கு உதவுவோம் என்னும் செயற்திட்டத்திற்காகவும் , அல் ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களை கௌரவிக்கும் வகையில் B4U வேரிஸ் விளையாட்டு கழகத்தினரால் நினைவுச்சின்னம் கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை B4U வேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கிய அல்-ஹாஜ் கலீல் முஸ்தபா மற்றும் மனாரியன் 88 பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தார் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.
Post a Comment