ஆசிரியர் தின நிகழ்வுகள்




 


(நூருல் ஹுதா உமர் 


கமு/ கமு/ ஜீ.எம்.எம். பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், பிரதி அதிபர் திருமதி குறைஷியா ராபிக், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல்.நஜீம் மற்றும் பகுதித் தலைவர்கள் உள்ளீட்ட ஆசிரியர்கள் மாணவர்களால் அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து; பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவாலும் மாணவர்களாலும் மகத்தான கெளரவம் அளிக்கப்பட்டதோடு ஆசிரியர் தின நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், உறுப்பினர்களான இசட்.ஏ. அஸ்மீர், எம்.ஏ.சி. ஹஸீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாதவாறு இவ்வாசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
மேலும் இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த பின்னர் பிரமாண்டமான முறையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையின் அதிபர் இல்லியாஸ், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் அன்பளிப்புகள் எதனையும் கொண்டுவரக்கூடாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.