தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை




 


உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்டம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அமைவாக இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது 

(நூருல் ஹுதா உமர்)