செய்தி தலைப்பு - 400 வெற்றி இலக்கு





 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 400 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 399 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் Glenn Maxwell 106 ஓட்டங்களையும், David Warner 104 ஓட்டங்களையும், Steven Smith 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Logan van Beek அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.